என் மலர்
உலகம்

102 வயது மூதாட்டியின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்
- கனவுக்கு வயது தடையாக அமையாது என்பது அவரது வாழ்வில் உண்மையானது.
- மூதாட்டியின் கனவை நிறைவேற்றிய இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்தன.
மேலை நாட்டினர் பலர், உலகின் இயற்கை அற்புதங்களையும், வரலாற்று பொக்கிஷங்களையும் ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பதை கனவாக கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டோரதி ஸ்மித். தற்போது 102 வயது மூதாட்டியாக இருக்கும் அவர், இளம் வயதிலேயே ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றுவந்துவிட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதில்லை. அதனால் அவரது கனவு முழுமையடையாமல் முதுமைக்கு சென்றுவிட்டிருந்தார். இருந்தபோதிலும் கனவுக்கு வயது தடையாக அமையாது என்பது அவரது வாழ்வில் உண்மையானது.
'யெஸ் தியரி' என்ற பிரபலமான யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் அம்மார் காண்டில் மற்றும் ஸ்டாபன் டெய்லர் ஆகியோருக்கு மூதாட்டியின் கனவு பற்றி தெரியவந்தது. அவர்கள் டோரதியை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றனர். டோரதி முதுமையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உற்சாகமாக ஆஸ்திரேலியாவில் வலம் வந்தார். மகிழ்ச்சி பொங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டார். அவை வைரலாக பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. மூதாட்டியின் கனவை நிறைவேற்றிய இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்தன.






