search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு
    X

    பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு

    • டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள்.
    • நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.

    இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×