என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

X
கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
By
மாலை மலர்1 April 2022 7:08 PM GMT (Updated: 1 April 2022 7:16 PM GMT)

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை காணப்படுகிறது.
தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் அங்குள்ள ராணுவ காவல் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேற்கு மாகாணத்திலும் நள்ளிரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த தலைவர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இம்ரான் கான் ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம்- எதிர்க்கட்சிகள் கருத்து
Next Story
×