என் மலர்

  உலகம்

  உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்
  X
  உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்

  உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்- ஐ.நா.சபை தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
  உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள்.

  நேற்று முன்தினம் ரஷியா தாக்குதலை தொடங்கியதுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் சென்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

  உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்

  இதுகுறித்து ஐ.நா. சபையின் அகதிகள் மைய தலைவர் பிலிப்போ கிராண்டி கூறும்போது, “உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக கடந்த 48 மணி நேரத்தில் வெளியேறி உள்ளனர். இதில் பெரும்பாலும் போலந்து மற்றும் மால்டோவா நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இன்னும் ஏராளமானோர் எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

  Next Story
  ×