search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு
    X
    சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு

    சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு

    சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தியேட்டர் இயக்குனர் தெரிவித்தார்.
    மொகாதிசு :

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது. இங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன. காரணம், தியேட்டர்கள் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கான களங்களாக ஆனதுதான்.

    இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

    இதுகுறித்து தியேட்டர் இயக்குனர் அப்திகாதிர் அப்தி யூசுப் கருத்து தெரிவிக்கையில், இந்த இரவு சோமாலி மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு என்று குறிப்பிட்டார்.

    நேஷனல் தியேட்டர்

    மேலும், பல வருட சவால்களுக்கு பிறகு இது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும் என்று தெரிவித்தார்.

    இந்த தியேட்டரில் 2 குறும்படங்களை 10 டாலர் (சுமார் ரூ.750) கொடுத்து மக்கள் பார்த்து ரசித்தனர்.

    இந்த தியேட்டர் சீன தலைவர் மாசேதுங்கின் பரிசாக, சீன என்ஜினீயர்களால் கட்டித்தரப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.

    Next Story
    ×