என் மலர்

  செய்திகள்

  கொரோனா தடுப்பூசி
  X
  கொரோனா தடுப்பூசி

  5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி பலன் அளிக்கிறது- பைசர் நிறுவனம் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பைசர் நிறுவனம் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கின.

  அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனையை நடத்தி வந்தது. இதற்காக அந்த வயதுகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

  இதில் பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் 3-ல் ஒரு பங்கு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

  இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல பலனை தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ்

  3-ல் ஒரு பங்கு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரிய வந்தது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே வலிமையுடன் காணப்பட்டனர்.

  அதே வேளையில் மற்ற இளம் வயதினர் போலவே அவர்களுக்கும் காய்ச்சல், உடல் வலி போன்றவை ஏற்பட்டன என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதையடுத்து 5- 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அங்கீகாரத்துக்காக பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி இந்த மாதம் விண்ணப்பிக்க உள்ளோம்.

  அதன் பின் ஐரோப்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். இந்த வயது குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.

  மேலும் பைசர் நிறுவனம் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை தொடக்க பள்ளி வயது குழந்தைகளுக்கு செலுத்தி சோதனையை நடத்தி வருகிறது.

  இதையும் படியுங்கள்... தடுப்பூசி போட்ட வெளிநாட்டினரை அனுமதிக்க அமெரிக்கா முடிவு

  Next Story
  ×