என் மலர்

  செய்திகள்

  மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து
  X
  மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோடியின் கவர்ந்திழுக்கும் புத்துணர்ச்சியையும், தற்கால சவால்களுக்கு தீர்வு காணும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையையும் உலகமே பாராட்டுகிறது.
  துஷான்பே :

  தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேயில் நேற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை போலவே, ரஷிய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

  அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். புன்முறுவலுடன் வாழ்த்து செய்தியை வாசித்தார். அதற்கு மோடி இருகரம் கூப்பி வணங்கி, வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

  இதுபோல், இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிக்கோலே குடாசேவ், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், “மோடியின் கவர்ந்திழுக்கும் புத்துணர்ச்சியையும், தற்கால சவால்களுக்கு தீர்வு காணும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையையும் உலகமே பாராட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×