என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா? என்ற இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிந்துவிடும் - அஸ்ட்ரா ஜெனேகா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரிசோதனை மீண்டும் தொடங்கும் பட்சத்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துகிறதா? என்ற இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிவிந்துவிடும் என அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  லண்டன்:   

  கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

  இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

  ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா? என்ற இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிந்துவிடும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பாசல் சோரியட் கூறுகையில், ’தடுப்பூசி பரிசோதனையின்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். 

  மற்ற நிறுவனங்களும் அவர்களது கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்துவது, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதும் மீண்டும் தங்கள் பரிசோதனையை தொடர்வதும் உண்டு. மற்ற தடுப்பூசி நிறுவனங்களுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் எங்களை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. அவர்களை கவனிப்பது இல்லை.

  தடுப்பூசியால் ஒரு நபருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

  இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விரைவில் மீண்டும் பரிசோதனை தொடங்கும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா? என்ற இறுதி மற்றும் முழுமையான முடிவு தெரிந்துவிடும்’ என்றார்.  

  Next Story
  ×