என் மலர்

  செய்திகள்

  பரிசோதனை
  X
  பரிசோதனை

  எகிப்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எகிப்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
  கெய்ரோ :

  எகிப்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்தில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இதனைத் தொடர்ந்து எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து, 1 லட்சத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5, 541 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.
  Next Story
  ×