என் மலர்

  செய்திகள்

  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
  X
  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாஸ்கோவில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
  மாஸ்கோ:

  ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று அவர் ர‌ஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  இது ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக இந்தியா கலந்துகொள்ளும் 3-வது வெளியுறவு மந்திரிகள் மாநாடு ஆகும். முன்னதாக 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன தலைநகர் பீஜிங்கிலும், 2019-ம் ஆண்டு மே மாதம் கிர்கிஸ்தான் தலைநகர் பி‌‌ஷ்கெக்கிலும் நடைபெற்ற ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.

  அதேபோல் இந்த ஆண்டு ர‌ஷியா தலைமையின் கீழ் நடைபெறும் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உரையாடல் வழிமுறைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.

  தற்போது மாஸ்கோவில் நடைபெறும் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும். மேலும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளை இந்தியா பரிமாறிக்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×