என் மலர்
செய்திகள்

விமான நிலையம் - கோப்புப்படம்
ஜப்பானில் தவிக்கும் 220 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம்
ஜப்பானில் தவிக்கும் 220 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கூட்டாக ஒரு கடிதம் கொடுத்துள்ளனர்.
டோக்கியோ:
நாடு திரும்ப முடியாமல், ஜப்பானில் 220 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்கள் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கூட்டாக ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். அதில், தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும், அங்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த இந்தியர்களில், பிறந்த குழந்தையை காண விரும்பும் ஒரு ஆராய்ச்சி மாணவர், பெங்களூருவில் வேலை கிடைத்துள்ள பட்டதாரி, 4 நாள் பணி நிமித்தமாக ஜப்பான் வந்த கர்ப்பிணி ஆகியோரும் அடங்குவர்.
Next Story






