என் மலர்

  செய்திகள்

  நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
  X
  நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

  நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் அருகில் உள்ள ராணுவ தளத்தில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
  கனோ:

  நைஜீரியாவின் மைடுகுரி நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது குபியோ கிராமம். இதன் அருகில் உள்ள ராணுவ தளத்தில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய மேற்கு ஆப்பிரிக்க மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்களும் 3 பொதுமக்களும் உயிரிழந்தனர். மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘‘ராணுவ தளத்தை ஆக்கிரமிப்பதற்காக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட 8 லாரிகளில் வந்த அவர்கள் உடனடியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். 

  இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன’’ என்றனர்.

  இதே போன்று நேற்று மைடுகுரி நகரில் இருந்து 14 மைல்கள் தொலைவில் உள்ள நெக்வாம் கிராமத்தில் போக்கோ ஹராம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இச்சம்பவத்தில் இருவர் பலியாகினர்.

  கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளால் 27,000 பொதுமக்கள் கொல்லப்படுள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

  இதே ராணுவ தளத்தை மே மாதம்  பயங்கரவாதிகள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×