search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம்
    X
    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம்

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து : பாகிஸ்தான் கடும் கண்டனம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

     இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததற்கான அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

    இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் தெரிவித்ததாவது:-

    ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்குரிய நிலப்பரப்பு என்பது ஐ.நா பாதுகாப்பு சபை முன்னர் இயற்றிய தீர்மானங்களில் ஒன்றாக உள்ளது . இங்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்ட விரோதமானது மற்றும் ஒருதலைபட்சமானது.

    இந்த முடிவை காஷ்மீர் மக்களோ பாகிஸ்தான் அரசோ ஏற்றுக்கொள்ள இயலாது. இதற்கு பாகிஸ்தான் சார்பில் கடுமையாக கண்டனத்தை தெரிவிக்கிறோம். மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிக்கும் இந்தியாவின் நடவடிக்கையை தடுக்க ஐ.நா. சபையில் முறையீடு செய்வது உள்பட அனைத்து விதமான முயற்சிகளிலும் பாகிஸ்தான் ஈடுபடும்.

    இவ்வாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×