என் மலர்
செய்திகள்

X
பாங்காக் ஷாப்பிங் மாலில் தீவிபத்து - 3 பேர் பரிதாப பலி
By
மாலை மலர்10 April 2019 8:47 PM IST (Updated: 10 April 2019 8:47 PM IST)

தாய்லாந்து நாட்டின் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #BangkokFire
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காங். இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பாங்காங் சென்ட்ரல் வேர்ல்டு ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மாலில் இன்று மாலை திடீரென தீ ஏற்பட்டது. மாலின் 8வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #BangkokFire
Next Story
×
X