என் மலர்

  செய்திகள்

  வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - இந்திய விமானப்படை
  X

  வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - இந்திய விமானப்படை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. #PakistanF16 #IndianAirForce
  பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. 

  எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டது. 

  இந்நிலையில்  அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரீன் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள எப். 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. இதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

  “இரு தரப்பு மோதலின் போது மிக் 21 விமானம், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை நவ்சேகரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஸ்திரமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று நிலைக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanF16 #IndianAirForce
  Next Story
  ×