என் மலர்

  செய்திகள்

  மெக்சிகோவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 15 பேர் பலி
  X

  மெக்சிகோவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு - 15 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.

  மெக்சிகோ சிட்டி:

  மெக்சிகோவில் எண்ணெய் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் குழாய்களை உடைத்து கும்பல்கள் எண்ணெய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  குறிப்பாக சாலமங்கா நகரில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான குழாய்களை உடைத்து கொள்ளை நடைபெறுகிறது. எனவே அக்கும்பல் அங்குள்ள ஒரு இரவு விடுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  உடனே அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்த போலீசார் நேற்று அதிகாலையில் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.

  இத்தாக்குதலில் 15 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். அவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார், இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×