என் மலர்

  செய்திகள்

  ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்
  X

  ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks
  இஸ்லாமாபாத்:

  பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

  இதில் இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90  உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

  இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

  மேலும், இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்’ ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks 
  Next Story
  ×