என் மலர்

  செய்திகள்

  கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 50 பேர் பரிதாப பலி
  X

  கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 50 பேர் பரிதாப பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KenyaBusAccident
  நைரோபி:

  கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பேருந்து ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 52க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

  அந்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபொழுது சாலையில் திரும்பியபோது திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் பலியாகினர். பேருந்தின் மேற்கூரை உடைந்து நொறுங்கியது.  தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.

  ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் சாலை விபத்துகளில் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. #KenyaBusAccident
  Next Story
  ×