என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஸா எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்தம் செய்ய ஹமாஸ் - இஸ்ரேல் சம்மதம்
    X

    காஸா எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்தம் செய்ய ஹமாஸ் - இஸ்ரேல் சம்மதம்

    இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் சண்டை நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளதால் அங்கு அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Gaza #Hamas #Israel
    டெல் அவிவ்:

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காஸா முனையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் சண்டை அதிகரித்து வந்தது. ஹமாஸ் உடன் போர் புரிய விருப்பம் இல்லை எனவும், தங்களை சீண்டாமல் இருந்தால் நாங்கள் அமைதியை கடைபிடிக்கிறோம் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சண்டை நிறுத்ததுக்கு ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், காஸா முனையில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×