search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சோமாலியா அதிபர் மாளிகை அருகே கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி

    சோமாலியா அதிபர் மாளிகை அருகே இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் உள்துறை அமைச்சக தலைமையகத்தின் அருகே இன்று பிற்பகல் இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

    அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Somalia #AlShabab
    Next Story
    ×