என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![கார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் - மனைவி பலி கார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் - மனைவி பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806190022468469_Wife-of-Cambodias-Prince-Ranariddh-dies-in-road-accident_SECVPF.gif)
X
கார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் - மனைவி பலி
By
மாலை மலர்19 Jun 2018 12:22 AM IST (Updated: 19 Jun 2018 12:22 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கம்போடியாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். #Combodia #PrinceRanariddh
நோம்பென்:
கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(வயது 39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201806190022468469_1_0z5vd2rp._L_styvpf.jpg)
அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Combodia #PrinceRanariddh #Tamilnews

Next Story
×
X