என் மலர்
செய்திகள்

12 வயதில் கன்னியாஸ்திரியால் பாலியல் வல்லுறவுக்கு இலக்கானவர் 62 வயது மகளை சந்தித்த தருணம்
கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திய 12 வயது சிறுவன், தற்போது 76 வயதை அடைந்துள்ள நிலையில் 62 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு பிறந்த குழந்தையை நேரில் சந்தித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தவர் எட்வர்ட் ஹயேஸ். 1950-ம் ஆண்டு அவர் 12 வயதை எட்டிய நிலையில், அந்த ஆசிரமத்தில் இருந்த 27 வயது மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரி ஒருவர் எட்வர்டை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார்.
பாலியல் உறவு காரணமாக கன்னியாஸ்திரி கர்பமடைந்தார். நடந்த சம்பவங்கள் வெளியே தெரிந்ததும் அந்த கன்னியாஸ்திரி இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவரது சொந்த நாடான அயர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை அடுத்து, குழந்தை பிறந்து பின்னர் சில ஆண்டுகள் கழித்து எட்வர்டை தேடி இங்கிலாந்து வந்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் மீண்டும் அவர் அயர்லாந்து திரும்பினார்.
இதன் பின்னர் திருமணம் செய்து கொண்ட கன்னியாஸ்திரி நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அவர் 2002-ம் ஆண்டு மரணமடைந்தார்.

62 வயது மகளுடன் 76 வயது எட்வர்ட் ஹயேஸ்
காலங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது எட்வர்ட் ஹயேஸ் தற்போது 76 வயதை எட்டிவிட்டார். இந்நிலையில், அந்த கன்னியாஸ்திரி மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எட்வர்ட் 62 ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் சந்தித்து உச்சி முகர்ந்துள்ளார்.
கன்னியாஸ்திரியின் மற்ற குழந்தைகள் எட்வர்டை தேடிப்பிடித்து இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர். “முதன் முதலாக எனது மகளை பார்க்கும் போது பதற்றமாக இருந்தது. பின்னர், அவள், நேரம் நம்மை இப்படி ஆக்கிவிட்டது அப்பா என்றாள். என்னைப் போன்றே அவளும் நகைச்சுவை உணர்வு மிக்கவள்” என எட்வர்ட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Next Story