என் மலர்

  செய்திகள்

  ஏசுநாதர் பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது
  X

  ஏசுநாதர் பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாத்மா காந்தி, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவர் மில்டன் நியூபெர்ரி பிராண்ட்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏசு கிறிஸ்துவைப் பற்றி எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது ஏலத்திற்கு வருகிறது.
  வாஷிங்டன் :

  மகாத்மா காந்தி, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவர் மில்டன் நியூபெர்ரி பிராண்ட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். தட்டச்சு செய்து, கையெழுத்திட்ட இந்தக் கடிதம் 1926-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ந் தேதி எழுதியது ஆகும்.

  இந்தக் கடிதத்தில் மகாத்மா காந்தி, ஏசு கிறிஸ்துவைப் பற்றி எழுதி உள்ளார். குறிப்பாக, “ஏசு கிறிஸ்து மனித குலத்தின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவராக திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ‘ராப் கலெக்‌ஷன்’ என்று அழைக்கப்படுகிற வரலாற்று சிறப்புவாய்ந்த ஆட்டோகிராப் (கையெழுத்து) மற்றும் ஆவண சேகரிப்பு நிறுவனத்திடம் இந்தக் கடிதம் தற்போது உள்ளது.

  இந்தக் கடிதம் ஏலம் விடப்படுகிறது. இது 50 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.32½ லட்சம்) விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ‘ராப் கலெக்‌ஷன்’ நிறுவனத்தின் நாதன் ராப் கூறும்போது, “உலகின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவர் ஏசு கிறிஸ்து என்ற காந்தியின் நம்பிக்கை, சக மனிதர்களுடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
  Next Story
  ×