என் மலர்

  செய்திகள்

  சீனாவில் முதியவர் ஆவேசம் - கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி
  X

  சீனாவில் முதியவர் ஆவேசம் - கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் இன்று 53 வயது முதியவர் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தனர். #knifeattack #china
  பீஜிங்:

  சீனாவில் சில பயங்கரவாதிகளும், விரக்தி அடையும் நபர்களும் அவ்வப்போது கத்திக்குத்து தாக்குதல்களில் ஈடுபட்டு பலரை கொன்று குவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் 53 வயது முதியவர் தனது வீட்டில் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தனர். கொலையாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

  இந்த மாதத்தில் சீனாவில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11-ம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 35 வயது நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #tamilnews #knifeattack #china
  Next Story
  ×