என் மலர்

  செய்திகள்

  ஒரு சிகரெட் பிடித்தாலும் இதயம் பாதிக்கும் - புதிய ஆய்வில் தகவல்
  X

  ஒரு சிகரெட் பிடித்தாலும் இதயம் பாதிக்கும் - புதிய ஆய்வில் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினமும் ஒரு சிகரெட் பிடித்தாலும் கூட இருதயம் பலவிதமான நோய்களால் பாதிப்படையும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  லண்டன்:

  அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது புகைத்து விடுகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர்.

  அது தவறு என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் கூட இருதயம் பலவிதமான நோய்களால் கடுமையாக பாதிக்கும். பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு கூறுகிறது.

  தினசரி 20 சிகரெட் புகைப்பவர் அதை கைவிட்டு ஒரு சிகரெட்டுக்கு மாறினாலும் மரணத்தை ஏற்படுத்தும். இருதய நோய்களை உருவாக்கும்.

  எனவே இருதய நோய்களில் இருந்து தப்பிக்க சிகரெட் பிடிக்க எந்த ஒரு வரையறையும் இல்லை என அறிவியல் இதழில் நிபுணர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். 1946 முதல் 2015-ம் ஆண்டு வரை படிப்படியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

  அதே நேரத்தில் தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவீதம் பேரும் பெண்களில் 57 சதவீதம் பேரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

  மேலும் ஆண்களில் 25 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதம் பேரும் பக்கவாதத்தால் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×