என் மலர்

  செய்திகள்

  எகிப்து தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
  X

  எகிப்து தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  கெய்ரோ:

  எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் அமைந்துள்ளது ஹெல்வான் நகரம். இங்குள்ள மர் மினா என்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நேற்று தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியுடன் நுழைந்தனர்.  அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரிமாரியாக சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

  இந்நிலையில், எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  தகவலறிந்து அங்கு 10-க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்து சென்றன. அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×