என் மலர்

  செய்திகள்

  ரஷியா: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு - 10 பேர் படுகாயம்
  X

  ரஷியா: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு - 10 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்ததில் அங்கிருந்த 10 கடைக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.
  மாஸ்கோ:

  ரஷியா நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நேற்று மாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த வணிக வளாகத்தில் வெடிகுண்டு வெடித்தது.

  இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதையடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வணிக வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் யாரும் பலியாகவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×