என் மலர்
செய்திகள்

அமெரிக்கா: கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வாலிபர் பலி
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஜக்சன் சிட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற வாலிபர் வசித்து வந்தார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா விசாவில் இங்கு வந்துள்ளார். வேலை கிடைத்த பிறகு இங்கேயே தங்கி விட்டார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மர்ம கும்பல் ஒன்று சந்தீப் வீட்டிற்குள் நுழைந்தது. சந்தீப் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வெளியே நின்று கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் செல்லும் போது துப்பாக்கியால் சுட்டனர். இதில் சந்தீப்பின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் திங்கட் கிழமை சந்தீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்கள் முகமுடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 16 ம் தேதி இந்தியாவை சேர்ந்த மாணவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல சம்பவங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

Next Story