என் மலர்

    செய்திகள்

    சீனாவின் சிச்சுவான் மாகாண நிலநடுக்கத்தில் 100 பேர் உயிரிழப்பு?
    X

    சீனாவின் சிச்சுவான் மாகாண நிலநடுக்கத்தில் 100 பேர் உயிரிழப்பு?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 6 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்களில் உள்ள டைல்கள் உடைந்து விழுந்தன. ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது. 
    Next Story
    ×