என் மலர்

    செய்திகள்

    ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் நீக்கம் - தேர்தல் கமிஷன் உத்தரவு
    X

    ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் நீக்கம் - தேர்தல் கமிஷன் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஊழல் வழக்கில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆளும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்குமாறு அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.

    இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

    இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் செரிப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதையடுத்து, கடந்த மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் ஆளும் கட்சியான முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.



    இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் இன்னும் ஒருவாரத்துக்குள் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×