என் மலர்

  செய்திகள்

  அடோப் நிறுவன சி.இ.ஓ சாந்தனு நாராயணன் மற்றும் முன்னாள் மருத்துவர் ஜெனரல் விவேக் மூர்த்தி
  X
  அடோப் நிறுவன சி.இ.ஓ சாந்தனு நாராயணன் மற்றும் முன்னாள் மருத்துவர் ஜெனரல் விவேக் மூர்த்தி

  அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் கவுரவிக்கப்பட இருக்கும் இந்திய வம்சாவளியினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று இரு இந்திய வம்சாவளியினர் சிறந்த குடியேறிகளாக அந்நாட்டு அரசால் கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் சுதந்திர தினம் வரும் 4-ம் தேதி அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினத்தில்
  வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி பல்வேறு துறைகளில் அந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் சிறந்த குடியேறிகளாக கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.

  இந்திய வம்சாவளியினரான அடோப் நிறுவனத்தின் சி.இ.ஓ ஷாந்தனு நாராயணன் மற்றும் அமெரிக்க முன்னாள் மருத்துவ ஜெனரல் விவேக் மூர்த்தி ஆகியோர் இந்தாண்டுக்கான சிறந்த குடியேறிகள் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவர் விவேக் மூர்த்தி முன்னாள் அதிபர் ஒபாமாவால் அந்நாட்டின் தலைமை மருத்துவர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

  ஆனால், பின்னர் அதிபர் பதவிக்கு வந்த டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் விவேக் மூர்த்தியை அப்பதவியிலிருந்து நீக்கினார். பிரிட்டனில் பிறந்த விவேக் மூர்த்தி, ஹார்வர்டு மற்றும் யாலே பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

  விருதுக்கு தகுதி பெற்றுள்ள மற்றொரு இந்திய வம்சாவளி நபரான ஷாந்தனு நாராயணன் ஐதராபாத்தில் பிறந்தவர். இந்தியாவில் கல்லூரிப் படிப்பு மற்றும் பெர்க்லி பல்கலைக் கழகத்தில் மேலாண்மை கல்வியை முடித்துள்ளார். அமெரிக்க தொழிலக கவுன்சிலில் உறுப்பினராகவும் நாரயணன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×