என் மலர்

  செய்திகள்

  பிரான்ஸ்: காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதிய மர்மநபர்
  X

  பிரான்ஸ்: காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதிய மர்மநபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார்.
  பாரீஸ்:

  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார்.

  பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். இதையடுத்து, மர்மநபர் வந்த காரில் இருந்து நெருப்பு மற்றும் புகை கிளம்பியது.  சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்தனர். காரை ஓட்டி வந்த மர்ம நபர் இறந்த நிலையில் காரில் கிடந்துள்ளார். மேலும், காரில் ரைபில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

  இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நகர போலீசார், காரை ஓட்டி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலையடுத்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  Next Story
  ×