search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா பொதுச்சபையின் அடுத்த தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு
    X

    ஐ.நா பொதுச்சபையின் அடுத்த தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேக்கிய நாட்டு வெளியுறவு மந்திரி மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லா நாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.

    இந்த சபையின் தலைவராக பிஜி தீவுகளைச் சேர்ந்த பீட்டர் தாம்சன் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. 



    இதனையடுத்து, புதிய தலைவராக ஸ்லோவேக்கிய நாட்டு வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான மந்திரி மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வெளியிட்டுள்ளார்.

    நேற்று கூடிய பொதுச்சபையில் மிரோஸ்லாவ் லாஜ்காக் உள்ளிட்ட 16 துணை தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ள ஐந்து நாடுகள் மேற்கொண்டு 5 துணை தலைவர்களை நியமித்தனர். வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் கூட இருக்கும் பொதுச்சபையில் மிரோஸ்லாவ் லாஜ்காக் உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×