என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் தண்டிக்கப்பட்ட தலீபான் தலைவரை தூக்கில் போட தடை
  X

  பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் தண்டிக்கப்பட்ட தலீபான் தலைவரை தூக்கில் போட தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் தண்டிக்கப்பட்ட தலீபான் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற பெஷாவர் ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
  பெஷாவர்:

  பாகிஸ்தானில் செயல்படுகிற தலீபான் அமைப்பில், முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் முஸ்லிம்கான். இவர் அந்த இயக்கத்தின் ஒரு பிரிவில் செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் முஸ்லிம்கான், அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொன்று குவித்தது தொடர்பான பயங்கரவாத வழக்கில் சிக்கினார். வழக்கை விசாரித்த ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

  இதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி அறிவித்த ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர்., “முதலில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், பின்னர் ராணுவ கோர்ட்டிலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கான் ஒப்புக்கொண்டார், அவர் குற்றவாளி என கண்டு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது” என்று கூறியது. இதையடுத்து அவர் தூக்கில் போடப்பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

  ஆனால் அவரது மனைவி நிடா பீவி, பெஷாவர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.  அந்த அப்பீல் வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி, நீதிபதி இஜாஸ் அன்வர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முஸ்லிம்கானை தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்ற தடை விதித்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் பதில் அளிக்க ராணுவ அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  Next Story
  ×