search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர உதவுங்கள்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
    X

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர உதவுங்கள்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபின் போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
    • இந்து கோவில்கள், வீடுகள், வணிக தொடர்பான இடங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த மாதம் 2-வது வாரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்க போராட்டம் தணிந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக வெடித்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினமா செய்தார். அதன்பின் போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். அங்கு வாழும் இந்துக்களை தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை நின்றபாடில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வன்முறைக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆகஸ்ட் 5-ந்தேதி கவிழ்ந்தது. அதில் இருந்து வங்காளதேசத்தின் 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் மைனாரிட்டி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோட முயற்சி செய்கிறார்கள்.

    வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய, இந்தப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கமாக பணியாற்றும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.

    துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்குமாறு பிடன் நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என மிட்சிகன் பாராளுமன்ற உறுப்பினரான தானேதர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஏராளமான இந்து கோவில்கள், வீடுகள், வணிகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவாமி லீக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்னர்.

    Next Story
    ×