என் மலர்
உலகம்

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு
- அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர்.
- இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
Next Story






