search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    48 மணி நேரத்திற்கு ஆழ்கடலில் இருந்த ஐபோன் 7 - நெகிழ்ந்து போன ஸ்கூபா டைவர்
    X

    48 மணி நேரத்திற்கு ஆழ்கடலில் இருந்த ஐபோன் 7 - நெகிழ்ந்து போன ஸ்கூபா டைவர்

    கடலில் விழுந்த ஐபோன் 7 ஆழ்கடலில் 48 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டிருப்பது ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. #iPhone7



    ஆப்பிள் ஐபோன் தரம் உலகம் அறிந்த ஒன்று தான், எனினும் இதன் தரத்தை நிரூபிக்கும் சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியிருக்கிறது. 

    கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இங்கிலாந்து சென்றிருந்த போது, கடலில் கயாகிங் (படகு சவாரி) செய்த போது தான் பயன்படுத்தி வந்த ஐபோன் 7 ஸ்மார்ட்போனின் அவரது கைகளில் இருந்து நழுவி, கடலில் விழுந்து விட்டது. கடலில் விழுந்தது எப்படி எடுப்பது என தெரியாமல், அவர் கனடாவிற்கே திரும்பி சென்றுவிட்டார்.

    இந்நிலையில், இங்கிலாந்தின் டர்டிள் டோர், டார்செட் பகுதியில் ஆழ்கடலில் நீந்தி கொண்டிருந்த ஸ்கூபா டைவர் (செரிஸ்) ஆழ்கடலில் ஏதே மின்விளக்கு மிளிர்வதை கண்டார். பின் அதன் அருகில் ஆர்வத்துடன் சென்ற அவருக்கு அதிர்ச்சி கலந்த சுவாரஸ்ய உணர்வு ஏற்பட்டது. தன் அருகே மிளிர்ந்தது குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன் பெற்ற ஐபோன் 7 என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.



    கடலில் விழுந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 84% சார்ஜூடன் தண்ணீரில் சீராக இயங்கியதோடு, அதில் நெட்வொர்க் சீராக இருந்ததால், குறுந்தகவல் ஒன்றும் வந்திருந்தது ஸ்கூபா டைவரான செரிஸ் வியப்பிற்கு காரணமாக அமைந்திருந்தது.

    ஆழ்கடலில் கண்டெடுத்த ஐபோன் 7 ஸ்மார்ட்போனினை அப்பகுதியில் வசித்து வந்த ஸ்மார்ட்போன் உரிமையாளரின் நண்பரிடம் கொடுத்து, அவர் மூலம் கனடாவிற்கு அனுப்ப உதவியாக செரிஸ் இருந்திருக்கிறார். கடினமான சூழலிலும் ஸ்மார்ட்போன் சீராக இயங்க அதன் உரிமையாளர் பயன்படுத்திய பாதுகாப்பு கேஸ் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் 7 மாடலில் IP67 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதுவே ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள காரணமாக அமைந்திருக்கிறது. #iPhone7 #applenews

    புகைப்படம்: நன்றி BBC.com | Divemagazine.co.uk
    Next Story
    ×