search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்
    X

    ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக Mi மிக்ஸ் 2எஸ் இருக்கிறது. கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்த Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக Mi மிக்ஸ் 2 உருவாகிறது. 

    சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பயன்படுத்துவது குறித்து சியோமி மற்றும் குவால்காம் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக Mi 7 இருக்கும் என கூறப்பட்டது. 

    எனினும் Mi 7 ஸ்மார்ட்போன் நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீன வலைத்தளமான IT168 வெளியிட்டிருக்கும் தகவல்களில் சியோமி Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கும் என்றும், இந்த சிப்செட் பெறும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமியின் புதிய ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கேமரா, மெல்லிய மெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் முக அங்கீகார வசதியை வழங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் சியோமி நிறுவனம் சோனி IMX363 கேமரா சென்சார்களை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை கேமரா வெளிச்சம் குறைவான பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    சீனாவில் Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் CNY 4000 (இந்திய மதிப்பில் ரூ.40,200) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ததும் மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பயன்படுத்தும் உரிமத்தை ஏற்கனவே பெற்றிருக்கும் நிலையில், சியோமி இந்த பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை எவ்வாறு வெளியிட திட்டமிட்டிருக்கிறது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. மேலும் அமெரிக்காவில் சாம்சங் விற்பனை செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×