என் மலர்
செய்திகள்

40 எம்பி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
புதுடெல்லி:
ஹூவாய் நிறுவனத்தின் P11 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் முதலில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் உயர் ரக கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.
சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஹூவாய் P சீரிஸ் ஸ்மார்ட்போனில் 40 எம்பி லெய்கா மூன்று லென்ஸ் கேமரா செட்டப் மற்றும் 5X ஹைப்ரிட் சூம் மற்றும் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்து ஆண்டு வெளியாக இருக்கும் ஸ் மார்ட்போன்களில் தலைசிறந்த கேமரா கொண்ட சாதனமாக இது இருக்கும் என கூறப்படும் நிலையில், இதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஹுவாய் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் சாதனம் வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான ரோலாண்ட் குவாண்ட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஹுவாய் P10 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கேமரா மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story