என் மலர்
செய்திகள்

மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட், மோட்டோ டர்போ பவர் பேக் பேட்டரி மாட் மற்றும் கேம் பேட் மாட் என மூன்று புதிய சாதனங்களை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 மாட் 10 மணி நேர பிளேடைம் கொண்டுள்ளது. இத்துடன் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் சவுண்ட் பூஸ்ட் 2 வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஃபேப்ரிக் பாடி என பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளது.

புதிய டர்போபவர் மாட் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், எல்இடி இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 20 நிமிடம் சார்ஜ் செய்து 50% வரை சார்ஜ் ஆகிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ கேம்பேட் மாட் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சாதனம் போன்களில் கேமிங் கண்ட்ரோல், டூயல் கண்ட்ரோல் ஸ்டிக், டி-பேட் மற்றும் நான்கு ஆக்ஷன் பட்டன்களை வழங்குகிறது. இந்த சாதனத்தில் 1035 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ டர்போபவர் பேக் மாட் விலை இந்தியாவில் ரூ.5999 முதல் துவங்குகிறது.

இதேபோல் மோட்டோ கேம் பாட் மற்றும் ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 மாட் விலை முறை ரூ.6,999 முதல் துவங்குகிறது. புதிய மோட்டோ மாட் சாதனங்கள் பிளிப்கார்ட் மற்றும் அனைத்து மோட்டோ ஹப்களிலும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் விற்பனை இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதி துவங்குகிறது. இத்துடன் ரென்ட்மோஜோவுடன் மோட்டோரோலா இணைந்து மோட்டோ மாட்களை ஒரு வாரத்திற்கு ரூ.399 விலையில் வாடகைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை சேவை டிசம்பர் 23-ம் தேதி துவங்கி இந்தியாவின் முக்கிய மெட்ரோக்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Next Story