என் மலர்

  செய்திகள்

  டூயல் கேமரா, 6 ஜிபி ரேம் கொண்ட ஹானர் வி10 அறிமுகம்
  X

  டூயல் கேமரா, 6 ஜிபி ரேம் கொண்ட ஹானர் வி10 அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாய் ஹானர் பிரான்டு டூயல் கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  பீஜிங்:

  சீனாவில் நடைபெற்ற விழாவில் ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மா்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 5.99 இன்ச் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டுள்ள ஹானர் வி10 ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 970 10nm சிப்செட் கொண்டுள்ளது.

  பிரத்யேக நியூரல் நெட்வொர்க் பிராசஸிங் யுனிட் கொண்டுள்ள ஹானர் வி10 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் எமோஷன் UI 8.0 கொண்டுள்ளது. 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள வி10 ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்ஃபி போர்டிரெயிட் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.  ஹானர் வி10 சிறப்பம்சங்கள்:

  - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே
  - ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
  - மாலி-G72 MP12 GPU
  - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
  - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
  - ஹைப்ரிட் டூயல் சிம்
  - 16 எம்பி (RGB) + 20 எம்பி (Monochrome) பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர்
  - எல்இடி பிளாஷ், PDAF, CAF, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
  - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3750 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
  - கைரேகை ஸ்கேனர்  ஹானர் வி10 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை அரை மணி நேரம் சார்ஜ் செய்தால் 0-50 சதவிகிதம் பேட்டரி நிரப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் புதிய ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பிளாக், அரோரா புளூ, கோல்டு மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

  ஹானர் வி10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 2699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,350 என்றும், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 2699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,280, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் 3,499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,165 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  புதிய ஹானர் வி10 ஸ்மார்ட்போன் சீனாவில் டிசம்பர் 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
  Next Story
  ×