என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாவா ரெட் நிறத்தில் அசத்தும் ஒன்பிளஸ் 5T அறிமுகம்
    X

    லாவா ரெட் நிறத்தில் அசத்தும் ஒன்பிளஸ் 5T அறிமுகம்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் லாவா ரெட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிடநைட் பிளாக் நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருந்த ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் லாவா ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    பக்கவாட்டுகளில் ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தாலும், முன்பக்கம் கருப்பு நிற பெசல்கள் ஸ்மார்ட்போனின் தோற்றத்தை மிகவும் ரம்மியமாக வெளிப்படுத்துக்கிறது. புதிய நிறத்தை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்



    ஒன்பிளஸ் 5T லாவா ரெட் நிறம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட பதிப்பு 3499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,150 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் லாவா ரெட் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T டிசம்பர் 12-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    சீனாவை தொடர்ந்து மற்ற சந்தைகளிலும் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் நிற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×