search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான்
    X

    67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான்

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை 200 விமான பயணிகளுக்கு இலசமாய் வழஙகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இலவசமாய் வழங்கியதற்கான காரணம் என்ன?
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி பிழை காரணமாக வெடித்ததால் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. புதிய நோட் 8 ஸ்மார்ட்போன்கள் சாக்லேட்களை போன்று பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு இலவசமாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சாம்சங் நடவடிக்கை அமைந்தது. இலவச நோட் 8 ஸ்மார்ட்போன் மாட்ரிட்டில் இருந்து கொருனாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

    இலவசமாக வழங்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பெட்டியில் கடந்த ஆண்டு இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொன்னோம், இம்முறை உங்களை வரவேற்கிறோம் என்ற வாசகம் ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு வெளியாகி பின் திரும்ப பெறப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.



    பேட்டரி பிழை காரணமாக வெடித்து சிதறிய நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பின் நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்பட்டு அவை செயலிழக்க செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் அப்டேட் மூலம் செயலிழக்கப்பட்டது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்ய்ப்பட்டது. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.67,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 இலவசமாக வழங்கப்படும் வீடியோவினை கீழே காணலாம்..,

    Next Story
    ×