என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
  X

  இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த ஸ்மார்ட்போன் விற்பனையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி விலை குறைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் சார்ந்த முழு தகவல்களை பார்ப்போம்.
  மும்பை:

  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J7 பிரைம் மற்றும் கேலக்ஸி J5 பிரைம் ஸ்மார்ட்போன்களின் 32 ஜிபி மாடல் விலையில் ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த மகேஷ் டெலிகாம் தெரிவித்துள்ளது.

  சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு சார்ந்த தகவல்கள் மகேஷ் டெலிகாம் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்சங் சார்பில் விலை குறைப்பு சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

  சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் 32 ஜிபி மாடல் ரூ.2,000 குறைக்கப்பட்டு ரூ.14,900க்கும். சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. இதேபோல் சாம்சங் கேலக்ஸி J5 பிரைம் 32 ஜிபி விலை ரூ.2,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.  சிறப்பம்சங்களை பொருத்த வரை சாம்சங் கேலக்ஸி J7 பிரைம் மெட்டல் பாடி, 5.5 இன்ச் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

  மெமரியை நீட்டிக்கும் வசதி கொண்ட கேலக்ஸி J7 பிரைம் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி J7 பிரைம் S பைக் மோட் ஆப்ஷன் கொண்டுள்ளது.

  ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும் இந்த ஆப்ஷன் ஆக்டிவேட் செய்யப்பட்டதும் வாகனத்தில் செல்லும் போது வரும் அழைப்புகளில் வாடிக்கையாளர் வாகனத்தில் செல்வதை கூறவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தெரிவித்து விடும். இதனால் வாகனம் ஓட்டும் போது அழைப்புகளினால் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் பாதுகாப்பாக சென்று வர முடியும்.
  Next Story
  ×