என் மலர்

  செய்திகள்

  4ஜி வோல்ட்இ சேவைகளை துவங்கும் பி.எஸ்.என்.எல்.
  X

  4ஜி வோல்ட்இ சேவைகளை துவங்கும் பி.எஸ்.என்.எல்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மிக விரைவில் 4ஜி வோல்ட்இ சேவைகளை துவங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் 2017-18 நிதியாண்டில் 4ஜி சேவைகளை துவங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி மொபைல் சேவைகளை துவங்கப்பட இருக்கும் நிலையில், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகை திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

  குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ் நாடு மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கவில்லை. முன்னதாக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்திருந்தார்.

  இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்தி வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டிருப்பதாக பி.எஸ்.என்.எல். சார்பில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நாடு முழுக்க பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்தி, சைபர் பாதுகாப்பினை அதிகப்பட்டுத்தும் நோக்கில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்கிறது. மேலும் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தாத ஆப்டிக் ஃபைபர் பாகங்களை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பி.எஸ்.என்.எல். சார்பில் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
  Next Story
  ×