என் மலர்
செய்திகள்

ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் வெளியானது
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி S8 ஆக்டிவ் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களை விட அதிக உறுதியானதாக இருக்கிறது.
சான்பிரான்சிஸ்கோ:
சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அன்லாக் செய்யப்பட்ட பதிப்பு 849.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.54,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற ஆக்டிவ் ரக ஸ்மார்ட்போன்களை விட அதிக உறுதியானதாக இருப்பதோடு, கடுமையான சூழ்நிலைகளிலும் தாங்கும் திறன், ஷாக்ப்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக AT&T கேரியரில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள புதிய மாடல் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்பளே, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் ஐந்து அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தலும், 30 நிமிடங்கள் தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாது.

சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் சிறப்பம்சங்கள்:
* 5.8 இன்ச் QHD+ 1440x2560 பிக்சல், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 12 எம்பி பிரைிமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா, ஆட்டோஃபோகஸ்
* 4000 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மீட்டோர் கிரே மற்றும் டைட்டானியம் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளதோடு மிலிட்டரி கிரேடு ஷீல்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை சிம் ஸ்லாட் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Next Story