என் மலர்

    செய்திகள்

    84 ஜிபி டேட்டா, 84 நாள் வேலிடிட்டி+அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்: ஏர்டெல் அதிரடி
    X

    84 ஜிபி டேட்டா, 84 நாள் வேலிடிட்டி+அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்: ஏர்டெல் அதிரடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜியோவின் தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக வோடபோன், ஐடியா மற்றும் ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய சலுகையை அறிவித்த நிலையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் சலுகை ரூ.399க்கு வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ சலுகைக்கு போட்டியாக ஐடியா, வோடாபோன் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் புதிய சலுகைகளை வழங்கின. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு 84 நாள் வேலிடிட்டி வழங்கின.

    அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 84 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டம் 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டும் என்றும் ஏர்டெல் வழங்கும் மற்ற திட்டங்களுடன் இதனை இணைக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ரூ.399 திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் 84 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் அழைப்புகளை மேற்கொள்ள வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் பின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஏர்டெல் எண்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.10 பைசா கட்டணமும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.30 பைசா செலுத்த வேண்டும். 



    இதனால் புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ஸ் கால் அளவு நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதே போன்ற சலுகையை ஜியோவும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கி வருகிறது. 

    மேலும் வோடபோன் நிறுவனமும் ரூ.352, ஐடியா ரூ.453 மற்றும் ஏர்செல் ரூ.348 விலையில் வழங்கி வருகிறது. எனினும் ஐடியா மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் 3ஜி வேகத்தில் டேட்டாவினை வழங்குகிறது. இதுமட்டுமின்றி போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இதே போன்ற சலுகை வழங்கப்படுகிறது.  

    முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பிக்பைட் எனும் சலுகையின் கீழ் 1000 ஜிபி அளவு இலவச டேட்டாவினை மார்ச் 2018 வரை வழங்குகிறது. ஏர்டெல் பிக்பைட் டேட்டா ஜூன் மாதத்தில் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
    Next Story
    ×