என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குன்னூரில் பள்ளி மாணவிகள் 5 பேரை பாலியல் வன்கொடுமை செய்த பட்டதாரி வாலிபர் கைது
    X

    குன்னூரில் பள்ளி மாணவிகள் 5 பேரை பாலியல் வன்கொடுமை செய்த பட்டதாரி வாலிபர் கைது

    • மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.
    • புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 26). பி.ஏ. பட்டதாரி. இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். திருமணம் ஆனவர். இவரது நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். உமேஸ்வரன் தனியாக வசித்து வந்தார்.

    இவரது பெட்டிக்கடைக்கு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் சிலர் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் சென்று உள்ளனர்.

    அப்போது அந்த மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்துவைத்துக் கொண்டு அடிக்கடி மாணவிகளிடம் பேசி ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உள்ளார்.

    உமேஸ்வரனின் பேச்சில் மயங்கிய 5 மாணவிகளை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    நாளடைவில் இவரது சுயரூபம் தெரிந்ததும் மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறைக்கு 1099 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஷோபனா தலைமையிலான குழுவினர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    பழங்குடியின மாணவிகள் 5 பேருக்கு பட்டதாரி வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×