என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#TVKvijay குடும்பத்திற்கு ரூ.2500 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் வரை... தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
- அன்னாபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.
- ஒவ்வொரு தங்கைகளின் திருமணத்திற்கும் அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர்,
த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும்.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
அண்ணன் சீர் திட்டம்- ஒவ்வொரு தங்கைகளின் திருமணத்திற்கும் அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்.
பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.
காமராஜர் கல்வி உறுதி திட்டம்- 1 முதல் 12-ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயிலும் வகையில் காமராஜர் கல்வி உறுதி திட்டம். ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெற்றொர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
கட்டணமில்லா பயணம்- வெற்றிப்பயணம் திட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம்.
பெண்கள் பாதுகாப்புக்கு மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும்.
பொதுப் போக்குவரத்தில் ஸ்மார்ட் panic பட்டன்- தனியார் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஸ்மார்ட் பேனிக் பட்டங்கள் அமைக்கப்படும்.
அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள்- பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு கிடைக்கும் வகையில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
ராணி வேலுநாச்சியார் படை- பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தீர்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம்.அமைக்கப்படும்.இந்த படையில் உள்ள பெண்கள் ஆடையில் கேமராவுடன்
விலையில்லா சானிடரி நாப்கின் - ரேசன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.
ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா நிதி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம், வெல்கம் கிட் வழங்கப்படும்.
எனது அறிவிப்புகள் எல்லாம் ஒரு சாம்பிள் தான், விரைவில் புதிய வாக்குறுதிகள் வெளியாகும் என கூறினார்.






