என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - சேலம் காவல் துறை விளக்கம்
    X

    விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - சேலம் காவல் துறை விளக்கம்

    • விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை.
    • குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்.

    கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக சேலத்தில் டிசம்பர் 4-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மனுவை நிராகரித்து சேலம் காவல்துறை த.வெ.க.வினருக்கு விளக்க கடிதம் அளித்துள்ளது. அதில்,

    * டிச.4-ந்தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும்.

    * விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை.

    * வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை.

    * குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்.

    * அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×